/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூத்தாண்டவர் கோவில் வைகாசி தேரோட்டம் கூத்தாண்டவர் கோவில் வைகாசி தேரோட்டம்
கூத்தாண்டவர் கோவில் வைகாசி தேரோட்டம்
கூத்தாண்டவர் கோவில் வைகாசி தேரோட்டம்
கூத்தாண்டவர் கோவில் வைகாசி தேரோட்டம்
ADDED : ஜூன் 12, 2025 12:45 AM

உளுந்தூர்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த நத்தாமூர் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவிலில் வைகாசி தேரோட்ட நிகழ்ச்சி, கடந்த 27ம் தேதி துவங்கியது. அடுத்த நாள் காப்பு கட்டுதலும், தொடர்ந்து, கூத்தாண்டவர், மாரியம்மன், அய்யனார் உள்ளிட்ட சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது.
நேற்று காலை 9:00 மணிக்கு வைகாசி தேரோட்டம் நடந்தது. இதில், கூத்தாண்டவர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில், தேரில் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தார்.
இன்று மதியம் 1:00 மணியளவில் தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.