ADDED : ஜன 05, 2024 12:12 AM

கள்ளக்குறிச்சி : வீரபாண்டிய கட்டபொம்மனின் 265வது பிறந்த நாள் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சியில்நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழக நாயுடு கூட்டமைப்பு மற்றும் கள்ளக்குறிச்சி நகர நாயுடு சங்கம் மாவட்டத் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.
பொருளாளர் கொளஞ்சியப்பன், துணைச் செயலாளர் மவுலிகா ராதாகிருஷ்ணன், இளைஞரணி தலைவர் அருண்,செயலாளர் பரணி, துணை செயலாளர் பாபு முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். விழாவில் நகர நாயுடுகள் சங்கத் தலைவர் சுப்ராயலு,வீரபாண்டிய கட்டபொம்மனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள் பாபுராஜ், ஆதிகேசவன், சீனு, ஜெயபிரகாஷ், ரவி, ஜெயராமன், ரகுபதி, வெங்கட், தேவராஜ், குணா, கோபி கிருஷ்ணன், கொளஞ்சியப்பன், செல்வம், மோகன், ராஜ்குமார் உட்பட பலர்பங்கேற்றனர்.
நகர நிர்வாகி பிரசாந்த் நன்றி கூறினார்.