/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியில் பழமை மாறாமல் அதிநவீன தேர் வடிவமைப்பு பணிகள்ளக்குறிச்சியில் பழமை மாறாமல் அதிநவீன தேர் வடிவமைப்பு பணி
கள்ளக்குறிச்சியில் பழமை மாறாமல் அதிநவீன தேர் வடிவமைப்பு பணி
கள்ளக்குறிச்சியில் பழமை மாறாமல் அதிநவீன தேர் வடிவமைப்பு பணி
கள்ளக்குறிச்சியில் பழமை மாறாமல் அதிநவீன தேர் வடிவமைப்பு பணி
ADDED : ஜூன் 07, 2024 06:28 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிய தேர்களை வடிவமைக்கும் பணிகளில் ஸ்ரீ ஹனேஷ் இன்ஜினியரிங் தேர் பட்டறை சாதனை படைத்து வருகிறது.கள்ளக்குறிச்சி உலகங்காத்தான் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் ஹனேஷ் இன்ஜினியரிங் தேர் பட்டறை இயங்கி வருகிறது.
45 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய தேர் வடிவமைப்பு மற்றும் வடிவம் மாறாமல் பழங்கால தேர்களை புதிய தொழில் நுட்பத்துடன் சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொண்டு வருகிறது.நான்கரை அடி அகலம், 21 அடி உயரம், பனிரெண்டரை அடி அகலம், 37 அடி உயரம் வரையிலான பிரம்மாண்ட தேர்கள் கூட இலுப்பை மரங்களால் ஆன அழகிய வடிவமைப்புகளுடன் சுவாமி சிலைகள், ஆட்டோமேட்டிக் பிரேக், இரும்பு அச்சுகளைக் கொண்ட சக்கரங்கள் பொருத்தி 100 ஆண்டுகளுக்கு மேலாக உழைக்கக்கூடிய அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தேர்கள் இங்கு செய்யப்படுகின்றன.5 அடி முதல் 15 அடி அகலம் வரையிலான இரும்புச்சக்கரங்கள் தேர்களின் அளவுக்கு ஏற்றாற்போல பிரேக்குடன் தயார் செய்யப்படுகிறது. பராமரிப்பின்றி பழுதடைந்த தேர்களையும், அதன் வடிவம் மாறாமல் புதிய தொழில்நுட்பத்தில் தயார் செய்கின்றனர். புதிய தேர் வாங்கினாலும், பழைய தேர்களை புதிப்பித்தாலும் மூன்று ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிப்பு பணிகள் செய்து தரப்படும்.இப்பணிகளை தேர் வடிவமைப்பு வல்லுனர் பிரகாஷ்,45; என்பவர் தனது தந்தை காலத்திலிருந்து செய்து வருகிறார். குறைந்த செலவில் தேர் செய்வதில் இவர்கள் கடந்த இரண்டு தலைமுறைகளாக சாதனை படைத்து வருகின்றனர். தேர் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த தேரினை அவர்களின் சொந்த ஊருக்கு நேரில் எடுத்து சென்று கொடுப்பதுடன், அந்த தேரினை அங்குள்ள தேரோடும் வீதிகள் வழியாக சோதனை ஓட்டம் செய்து காண்பிகின்றனர்.அத்துடன் தேர்களை அந்தந்த பகுதிகளுக்கே சென்று தயாரித்துக் கொடுக்கும் வசதியும் இவர்களிடம் உள்ளது. இதுகுறித்து மேலும் விபரங்கள் அறிய 99761 62384 என்ற மொபைல் எண்ணில் பிரகாஷை தொடர்பு கொள்ளலாம்.