/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சி மாவட்ட கலைஞர்களுக்கு விருதுகள்ளக்குறிச்சி மாவட்ட கலைஞர்களுக்கு விருது
கள்ளக்குறிச்சி மாவட்ட கலைஞர்களுக்கு விருது
கள்ளக்குறிச்சி மாவட்ட கலைஞர்களுக்கு விருது
கள்ளக்குறிச்சி மாவட்ட கலைஞர்களுக்கு விருது
ADDED : பிப் 25, 2024 05:34 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 30 கலைஞர்களுக்கு பொற்கிழியுடன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலை மன்றம் சார்பில் 2022-23 மற்றும் 2023-24ம் ஆண்டிற்கான மாவட்ட கலை மன்ற விருதுக்கு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப் புலமை அடிப்படையில் வயது அடிப்படையாகக் கொண்டு கலை இளமணி, கலை வளர்மணி, கலைச் சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி என ஆண்டுக்கு 15 கலைஞர்கள் வீதம் இரண்டாண்டுக்கு 30 கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான விருது வழங்கும் விழா கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் பொற்கிழிகளை வழங்கினார். 30 கலைஞர்களுக்கு மொத்தம் 3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.
விழாவில் கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், கலை மன்ற விருதாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.