Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இரு பெண்களிடம் நகை திருட்டு

இரு பெண்களிடம் நகை திருட்டு

இரு பெண்களிடம் நகை திருட்டு

இரு பெண்களிடம் நகை திருட்டு

ADDED : மே 18, 2025 02:51 AM


Google News
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே, இரு பெண்களிடம் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கோவிலுார் அடுத்த குலதீபமங்கலம், முருகன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்தது. இதில், அதே ஊரை சேர்ந்த கண்ணன் மனைவி அஞ்சலை, 48; கலந்து கொண்டார். அங்கு அவரது கழுத்தில் அணிந்து இருந்த, 3 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

இதேபோல, ராஜேந்திரன் மனைவி பூரணி, 50; கழுத்தில் இருந்த, 2 சவரன் செயினும் திருடப்பட்டது. இது குறித்து இருவரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், மணலுார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us