/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டுஅரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு
அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு
ADDED : ஜன 07, 2024 05:54 AM
கள்ளக்குறிச்சி: வி.கிருஷ்ணாபுரத்தில் அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை, பணம் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த வி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னனையன் மகன் ராமசாமி, 51; அரசு பஸ் கண்டக்டர். கடந்த 5ம் தேதி மதியம் 1.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு ராமசாமி மற்றும் அவரது மனைவி அலமேலுவும் வெளியே சென்றனர்.
பிற்பகல் 3:00 மணியளவில் வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்தது. உள்ளே பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.