/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மத்திய பா.ஜ., அரசு இழைக்கும் அநீதி : ஓரணியில் தமிழ்நாடு மூலம் பரப்புரை; தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டாக அறிவிப்பு மத்திய பா.ஜ., அரசு இழைக்கும் அநீதி : ஓரணியில் தமிழ்நாடு மூலம் பரப்புரை; தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டாக அறிவிப்பு
மத்திய பா.ஜ., அரசு இழைக்கும் அநீதி : ஓரணியில் தமிழ்நாடு மூலம் பரப்புரை; தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டாக அறிவிப்பு
மத்திய பா.ஜ., அரசு இழைக்கும் அநீதி : ஓரணியில் தமிழ்நாடு மூலம் பரப்புரை; தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டாக அறிவிப்பு
மத்திய பா.ஜ., அரசு இழைக்கும் அநீதி : ஓரணியில் தமிழ்நாடு மூலம் பரப்புரை; தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டாக அறிவிப்பு
ADDED : ஜூலை 02, 2025 08:09 AM

கள்ளக்குறிச்சி; தமிழகத்திற்கு மத்திய பா.ஜ., அரசு இழைக்கும், அநீதிகளுக்கு ஓரணியில் தமிழ்நாடு என்ற முறையில் மக்கள் திரள வேண்டும் என தி.மு.க.,வினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., சார்பில் நடக்கவுள்ள ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை குறித்து மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது;
முதல்வர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரை துவக்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து வரும் 45 நாட்களுக்கு ஒவ்வொரு கிராமம், நகரம், பூத் மற்றும் அனைத்து வீடுகளிலும் தி.மு.க., நிர்வாகிகள் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும். அதில் மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்திற்கு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியதின் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்படும்.
பா.ஜ., வுக்கு எதிரான மாநிலங்களுக்கு நிதி வழங்காதது, மாநில உரிமைகளை அபகரிப்பது, நீட் தேர்வு மூலம் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, கல்விக்கான நிதியை நிறுத்தி வைப்பது, கீழடி தொன்மையை அங்கீகரிக்க மறுப்பது உள்ளிட்ட மத்திய பா.ஜ., அரசின் அநீதிகள் குறித்து ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் கொண்டு செல்லப்படும்.
தி.மு.க., நிர்வாகிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று எடுத்துரைக்க உள்ளோம். இதில் ஒத்துப்போகும் குடும்பத்தினர் தங்களது ஆதரவை செயலில் பதிவு செய்யலாம். கூடுதலாக தி.மு.க.,வில் இணைய விருப்பம் உள்ளவர்கள், செயலி மூலம் பதிவு செய்து உறுப்பினராகலாம். இந்த முன்னெடுப்பு தி.மு.க.,விற்கான உறுப்பினர் சேர்க்கையாக மட்டும் இருக்காது. எதிர்கட்சிகளை சேர்ந்த குடும்பத்தினர் உட்பட அனைரிடமும் பரப்புரை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.