/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/அறிவு சார் மைய கட்டடம் திறப்பு விழாஅறிவு சார் மைய கட்டடம் திறப்பு விழா
அறிவு சார் மைய கட்டடம் திறப்பு விழா
அறிவு சார் மைய கட்டடம் திறப்பு விழா
அறிவு சார் மைய கட்டடம் திறப்பு விழா
ADDED : ஜன 08, 2024 06:05 AM

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டையில் அறிவு சார் மைய நுாலக கட்டடம் திறப்பு விழா நடந்தது.
திருவெண்ணைநல்லுார் சாலையில் 1.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவு சார் மைய நுாலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் கானொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, நுாலகத்தில் நகரமன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் குத்து விளக்கேற்றி வைத்தனர். துணைத் தலைவர் வைத்தியநாதன் வரவேற்றார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்திற்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., மலர் துாவி மரியாதை செலுத்தினார். நகராட்சி கமிஷனர் இளவரசன், கவுன்சிலர்கள், நகராட்சி பணியாளர்கள், துாய்மைப் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.