/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைப்புசிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைப்பு
சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைப்பு
சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைப்பு
சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்கி வைப்பு
ADDED : ஜன 30, 2024 11:25 PM

கள்ளக்குறிச்சி : தெங்கியாநத்தம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியை ஒன்றிய துணை சேர்மன் துவக்கி வைத்தார்.
சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் ஊராட்சி காலனி தேரோடும் வீதியில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் திராவிடமணி, ஊராட்சி துணை தலைவர் பரமேஸ்வரி துரைக்கண்ணு, நிர்வாகிகள் ராமச்சந்திரன், சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பலர்பங்கேற்றனர்.