/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பிரத்யேக தபால் பட்டு வாடா மையம்; கள்ளக்குறிச்சியில் துவக்க விழா பிரத்யேக தபால் பட்டு வாடா மையம்; கள்ளக்குறிச்சியில் துவக்க விழா
பிரத்யேக தபால் பட்டு வாடா மையம்; கள்ளக்குறிச்சியில் துவக்க விழா
பிரத்யேக தபால் பட்டு வாடா மையம்; கள்ளக்குறிச்சியில் துவக்க விழா
பிரத்யேக தபால் பட்டு வாடா மையம்; கள்ளக்குறிச்சியில் துவக்க விழா
ADDED : ஜூலை 01, 2025 01:46 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தலைமை அஞ்சலகத்தில் பிரத்யேக தபால் பட்டு வாடா மையம் துவக்க விழா நடந்தது.
வெளிப்பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வரும் தபால்கள், பார்சல்கள் அனைத்தும் உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கிடும் வகையில், பிரத்யேக தபால் பட்டுவாடா சேவை மையம் நேற்று துவக்கப்பட்டது.
விழாவிற்கு, விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். தலைமை அஞ்சல் அலுவலர் தனசேகரன் வரவேற்றார்.
இந்த சேவை மையம் மூலம் அகரகோட்டாலம், க.அலம்பலம், குதிரைச்சந்தல், நல்லாத்துார், நீலமங்கலம், உலகங்காத்தான், சிறுவங்கூர், சோமண்டார்குடி, தச்சூர், தண்டலை, தென்கீரனுார் மற்றும் விளம்பார் ஆகிய கிளை அஞ்சலகங்களுக்கு வரும் தபால்கள் அனைத்தும், கள்ளக்குறிச்சி தபால் பட்டு வாடா மையம் மூலம் நேரடியாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் பங்கேற்றனர்.