/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உளுந்துார்பேட்டை டோல்கேட் இணைப்பு சாலையில் ஒளிரும் மின் விளக்குகள், தடுப்பு அமைப்பு விபத்துகளை தடுக்க நடவடிக்கை உளுந்துார்பேட்டை டோல்கேட் இணைப்பு சாலையில் ஒளிரும் மின் விளக்குகள், தடுப்பு அமைப்பு விபத்துகளை தடுக்க நடவடிக்கை
உளுந்துார்பேட்டை டோல்கேட் இணைப்பு சாலையில் ஒளிரும் மின் விளக்குகள், தடுப்பு அமைப்பு விபத்துகளை தடுக்க நடவடிக்கை
உளுந்துார்பேட்டை டோல்கேட் இணைப்பு சாலையில் ஒளிரும் மின் விளக்குகள், தடுப்பு அமைப்பு விபத்துகளை தடுக்க நடவடிக்கை
உளுந்துார்பேட்டை டோல்கேட் இணைப்பு சாலையில் ஒளிரும் மின் விளக்குகள், தடுப்பு அமைப்பு விபத்துகளை தடுக்க நடவடிக்கை
ADDED : மார் 25, 2025 07:47 AM

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே இணைப்பு சாலை பகுதியில் விபத்துகளை தவிர்க்க, ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப் பட்டுள்ளதுடன், சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்பு அமைத்து மூடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையின் குறுக்கே, பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் கடந்து செல்லும்போது விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதனால் இணைப்புச் சாலை நடுவே பேரிகார்டு, சிமென்ட் கட்டைகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக, இந்த தடுப்பை அகற்றிவிட்டு பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாலையின் குறுக்கே கடந்து செல்லத் துவங்கின. கடந்த 21ம் தேதி இணைப்பு சாலையின் குறுக்கே கடந்து சென்ற தனியார் பஸ் மீது டேங்கர் லாரி மோதி 12க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அதை தொடர்ந்து, இணைப்புச் சாலையின் நடுவே இடைவெளியை நிரந்தரமாக மூடுவதற்கு கான்கிரீட் கட்டை அமைக்க வேண்டும் அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, நேற்று மாலை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் இணைப்பு சாலை பகுதியில் ஒளிரும் மின் விளக்குகளை அமைத்தனர். மேலும், இணைப்புச் சாலையின் குறுக்கே எந்த வாகனங்களும் கடந்து செல்லாத வகையில், சாலை நடுவே உள்ள இடைவெளியில் பேரிகார்டுகள், சிமென்ட் கட்டை வைத்து மூடினர்.
வாகனங்கள், விருத்தாசலம் செல்லும் சாலை மேம்பாலம் அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக உளுந்துார்பேட்டை நகர் பகுதிக்குள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையினரின் இந்த நடவடிக்கையை வாகன ஓட்டிகள் வரவேற்றாலும், இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.