Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மக்களுக்கான சேவையே மகத்தான பணி ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் பெருமிதம்

மக்களுக்கான சேவையே மகத்தான பணி ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் பெருமிதம்

மக்களுக்கான சேவையே மகத்தான பணி ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் பெருமிதம்

மக்களுக்கான சேவையே மகத்தான பணி ஐ.ஜே.கே., மாவட்ட தலைவர் பெருமிதம்

ADDED : செப் 30, 2025 08:10 AM


Google News
Latest Tamil News
மக்களுக்கு சேவையாற்ற ஐ.ஜே.கே., மகத்தான வாய்ப்பை வழங்கி இருக்கிறது என விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

ஐ.ஜே.கே., தலைவர்கள் பாரிவேந்தர், ரவிபச்சமுத்து ஆகியோரின் வழிகாட்டுதலுடன், கட்சி பணியாக மட்டுமல்லாது, மக்களுக்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பாக கருதி ஐ.ஜே.கே.,வில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் பொறுப்பு என்ற பொறுப்பை உணர்ந்து கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சியின் கொள்கையான சமத்துவம், சகோதரத்துவத்தை நிலைநாட்டும் வகையில் புதிய தலைமுறை, புதிய கொள்கை, புதிய கட்சி என்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

கட்சிப் பணியை திறம்பட செய்து கொண்டிருப்பதன் காரணமாக பாரிவேந்தரின் நன்மதிப்பை பெற்றதனால் பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொருளாளராக தேர்வு செய்யப்பட்டு சங்கத்தின் மூலம் சமூகத்திற்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ரோட்டரி கிளப்பின் தலைவராக இருந்து மக்களுக்கான பல்வேறு சேவை திட்டங்களை செய்யும் புனித வாய்ப்பாக பெற்றுள்ளேன். இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வரும் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் மரக்கன்று நடுதல், மாணவர்களிடையே பசுமை புரட்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வினாடி வினா போட்டி நடத்துவது பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

மக்களின் சேவையே மகத்தான சேவை. இதன் மூலமே இறைவனை அடைய முடியும் என்ற இறைவுனர்வுடன் ஆன்மிகம் சேவையையும் ஒருங்கிணைத்து மக்களுக்கு பயன் தரும் பல நற்காரியங்கள் செய்து வருகிறேன்.ஐ.ஜே.கே., கட்சியின் சார்பில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல போராட்டங்களை நடத்தி மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் இந்த அரிய பணி மன மகிழ்ச்சியை அளிக்கிறது.

இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us