ADDED : ஜன 06, 2024 06:22 AM

சங்கராபுரம், : சங்கராபுரத்தில் அயோத்தி ராமர் கோவில் அட்சதை பொது மக்களுக்கு வழங்க பாக்கெட் போடும் பணி நடந்து வருகிறது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிேஷக நடக்க உள்ளது. இதற்காக அயோத்தியில் இருந்து ராமர் கோவில் அட்சதை கொண்டு வரப்பட்டு சங்கராபுரம் திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் பாக்கெட் போடும் பணி நடந்து வருகிறது.