/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கோவிலுக்கு கோபுர கலசம்: ஐகோர்ட் நீதிபதி வழங்கல் கோவிலுக்கு கோபுர கலசம்: ஐகோர்ட் நீதிபதி வழங்கல்
கோவிலுக்கு கோபுர கலசம்: ஐகோர்ட் நீதிபதி வழங்கல்
கோவிலுக்கு கோபுர கலசம்: ஐகோர்ட் நீதிபதி வழங்கல்
கோவிலுக்கு கோபுர கலசம்: ஐகோர்ட் நீதிபதி வழங்கல்
ADDED : ஜூன் 01, 2025 04:36 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை கெங்கை அம்மன் கோவிலுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி கோபுர கலசம் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, கைலாசநாதர் கோவில் குளக்கரையில் அமைந்துள்ள கெங்கை அம்மன் கோவிலில் வரும் 6ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கோவிலுக்கு சென்னை ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி அவரது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு வந்தார். அப்போது கோவில் நிர்வாகிகள் மணிகண்டன், ராமதாஸ், பொன்னுசாமி, குமார், வழக்கறிஞர் வெங்கடேசன், முருகன், தண்டபாணி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
இதையடுத்து நீதிபதி தண்டபாணி, சுவாமி தரிசனம் செய்து, கோவில் கோபுரத்திற்கான கலசத்தை நிர்வாகிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., அசோகன், இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.