/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம் வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம்
வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம்
வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம்
வீட்டுப்பணி தொழிலாளர்கள் நல வாரியத்தில் சேர உதவி மையம்
ADDED : ஜூன் 20, 2025 04:01 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் வீட்டுப்பணி தொழிலாளர்கள் இணையதளம் மூலம் நல வாரியத்தில் பதிவு செய்ய சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் விடுத்த செய்திக்குறிப்பு:
வீட்டுப்பணி தொழிலாளர்களை இணையதளம் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்வதற்காக சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தகுதியுள்ள பணியாளர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் உள் ளிட்ட அசல் ஆவணங்களுடன், எண்23/ஏ, தாய் இல்லம், அண்ணாநகர் பிரதான சாலை, கள்ளக்குறிச்சி - 606202, என்ற முகவரியில் இயங்கும் கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் சமர்பித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இதன் மூலம் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து, நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடையலாம்.