/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூடுதல் வழித்தடத்தில் அரசு பஸ் சேவை துவக்கம் கூடுதல் வழித்தடத்தில் அரசு பஸ் சேவை துவக்கம்
கூடுதல் வழித்தடத்தில் அரசு பஸ் சேவை துவக்கம்
கூடுதல் வழித்தடத்தில் அரசு பஸ் சேவை துவக்கம்
கூடுதல் வழித்தடத்தில் அரசு பஸ் சேவை துவக்கம்
ADDED : ஜூன் 30, 2025 03:24 AM

ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூரில் வழித்தடம் நீட்டிக்கப்பட்ட அரசு பஸ் சேவை துவக்க விழா நடந்தது.
பழையசிறுவங்கூரில் இருந்து சங்கராபுரம் பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து, சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 38ஏ வளையாம்பட்டு வரையிலும், தடம் எண் 21பி குளத்துார் வரையிலும் இயக்கப்பட்ட அரசு பஸ்களின் வழித்தடம் பழைய சிறுவங்கூர் வரை நீட்டிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி கொடியசைத்து புதிய வழித்தடத்தில் பஸ்களை இயக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர்கள் நாகராஜன், குணசேகரன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் செல்வி பால்ராஜ் வரவேற்றார்.
தி.மு.க., நிர்வாகிகள் ராஜி, சிவமுருகன், சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.