Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியர் விருது

ADDED : செப் 04, 2025 12:47 AM


Google News
கள்ளக்குறிச்சி : மாநில நல்லாசிரியர் விருதுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 9 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களால் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வெள்ளி பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் வழங்கப்படும்.

அதன்படி, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, அம்மன் கொல்லைமேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி, ஜி.அரியூர் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பாலமுருகன், ரிஷிவந்தியம் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் ஹரிஹரன், உளுந்துார்பேட்டை மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கனகசபை, கல்லமேடு நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நந்தகோபாலகிருஷ்ணன், செம்மனங்கூர் துவக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கலைவாணி, திருக்கோவிலுார் ஞானானந்தா மெட்ரிக் பள்ளி முதல்வர் ஹேமலதா ஆகிய 9 பேர் மாநில நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us