/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தீப்பற்றி எரிந்த ஜெனரேட்டர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு தீப்பற்றி எரிந்த ஜெனரேட்டர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
தீப்பற்றி எரிந்த ஜெனரேட்டர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
தீப்பற்றி எரிந்த ஜெனரேட்டர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
தீப்பற்றி எரிந்த ஜெனரேட்டர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
ADDED : ஜன 08, 2025 08:35 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை கட்டடங்களுக்கு நடுவே, பழைய அரசு கலைக்கல்லுாரி கட்டடம் உள்ளது.
கொரோனா தொற்றின் போது இக்கட்டடம் தனிமை வார்டாக மாற்றப்பட்டது. இங்கு தடையின்றி சிகிச்சை அளிக்க, கட்டடத்தின் வெளியே ஜெனரேட்டர் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பழைய அரசு கல்லுாரி கட்டடம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது.
இங்கு தற்போது கட்டுமான பணி நடப்பதால் வெளி நபர்கள் யாரும் இல்லை. நேற்று மதியம் 12.00 மணியளவில் கட்டடத்திற்கு வெளியே இருந்த ஜெனரேட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
ஜெனரேட்டரில் இருந்த பேட்டரியில் கசிவு ஏற்பட்டு தீ பிடித்திருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.