ADDED : ஜன 08, 2024 06:08 AM

கள்ளக்குறிச்சி: ரோடு மாமாந்துாரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமாந்துார் பகுதியில் உள்ள கோமுகி ஆற்றின் பாலம் மற்றும் சாலையோரங்களில் குப்பைகளை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளால், மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், நாய், பன்றிகள் குப்பைகளை கிளறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும், தேங்கியுள்ள குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து சாலையில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.