/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கோமுகியில் கொட்டப்படும் குப்பைகள்: ஆற்றின் பரப்பு குறைந்து வரும் அவலம்கோமுகியில் கொட்டப்படும் குப்பைகள்: ஆற்றின் பரப்பு குறைந்து வரும் அவலம்
கோமுகியில் கொட்டப்படும் குப்பைகள்: ஆற்றின் பரப்பு குறைந்து வரும் அவலம்
கோமுகியில் கொட்டப்படும் குப்பைகள்: ஆற்றின் பரப்பு குறைந்து வரும் அவலம்
கோமுகியில் கொட்டப்படும் குப்பைகள்: ஆற்றின் பரப்பு குறைந்து வரும் அவலம்
ADDED : ஜன 03, 2024 12:01 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கோமுகி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பையால் ஆற்றின் அகலம் படிப்படியாக குறைந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில், சேகரிக்கப்படும் குப்பைகள் தியாகதுருகம் சாலையில் கோமுகி ஆற்றின் அருகே கொட்டப்பட்டு வந்தது. அப்பகுதியில் குப்பைகளைக் கொட்ட பசுமை தீர்ப்பாயம் தடை உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மறுசுழற்சி செய்து உரம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மின் மயான வளாகத்தில் பசுமை உர பூங்கா அமைக்கப்பட்டது.
இங்கு மக்கும் குப்பைகளை மறு சுழற்சிக்குட்படுத்தி உரம் தயாரித்திடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மின் மயானத்திற்கு பின்புறம் உள்ள கோமுகி ஆற்றங்கரையில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் ஆற்றின் அகலம் படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் மின் மயானத்தில் திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பைகளில் பயங்கர துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
இந்நிலையில், இறந்தவர்களின் உடலை இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்வதற்கு மின் மயானத்திற்கு கொண்டு செல்லும் போது அங்கு வீசும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பிளாஸ்டிக் குப்பைகள் இரவு நேரங்களில் தீ வைத்து எரிக்கப்படுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.
எனவே, மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை தீ வைத்து எரிப்பதை தடுத்து, முறையாக அங்கிருந்து அகற்றுவதுடன், மின் மயானத்தில் குப்பைகளால் வீசும் பயங்கர துர்நாற்றத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.