/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
அரசு கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : ஜூலை 02, 2025 07:48 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி திட்டம் மற்றும் வரவேற்பு விழா நடந்தது.
கல்லுாரி முதல்வர் தர்மராஜா தலைமை தாங்கினார். துறை தலைவர்கள் உமா, பிரேமா, நுாலகர் அசோக்குமார், வீரலட்சுமி முன்னிலை வகித்தனர். பேராசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். விழாவில் டி.எஸ்.பி., தங்கவேல் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து வரும் 5ம் தேதி வரை அறிமுக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதில் மாணவர்கள் கலந்துரையாடல், திறன் மேம்பாட்டு திட்டங்கள், மனித உரிமைகள், பெண்கள் பாதுகாப்பு, மாணவர் நல்வாழ்வு, சுகாதாரம், மாணவர்கள் ஆதரவு அமைப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.
அரசு திட்டங்களான தமிழ் புதல்வன், புதுமை பெண், கல்வி உதவி தொகைகள், தொழில் வழிகாட்டுதல், பாடத்திட்டம், ராகிங் எதிர்ப்பு குழு, பாலியல் துன்புறத்தல் எதிர்ப்பு, போதை பொருள் ஒழிப்பு குறித்த கருத்துரைகளும் வழங்கப்படுகிறது.
விழாவில், உடற் கல்வி இயக்குனர் சரவணன், ஆங்கில துறை தலைவர் முருகானந்தன், நிதியாளர் சரவணன், கண்காணிப்பாளர் மகேஷ் உட்பட பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தமிழ் துறை தலைவர் மோட்ச ஆனந்தன் நன்றி கூறினார்.