/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டம் உளுந்துார்பேட்டையில் கலெக்டர் கள ஆய்வு'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டம் உளுந்துார்பேட்டையில் கலெக்டர் கள ஆய்வு
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டம் உளுந்துார்பேட்டையில் கலெக்டர் கள ஆய்வு
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டம் உளுந்துார்பேட்டையில் கலெக்டர் கள ஆய்வு
'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டம் உளுந்துார்பேட்டையில் கலெக்டர் கள ஆய்வு
ADDED : ஜன 31, 2024 02:07 AM
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை தாலுகாவில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: உங்களைத்தேடி, உங்கள் ஊரிலே என்ற புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, மாதந்தோறும் கடைசி புதன்கிழமை தினத்தன்று தாலுகா அளவில் தங்கி, கள ஆய்வு மேற்கொள்ளவும், அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள் தடையின்றி பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யவும் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, உளுந்துார்பேட்டை தாலுகாவில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (31ம் தேதி) கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இதில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், அரசு அலுவலகங்களின் வசதிகள், செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள் செயல்படுத்துதல், பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாகவும் கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொள்கிறார். மற்ற பகுதிகளில் அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு, மதிப்பாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வு மற்றும் பொதுமக்களின் சேவைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக தமிழக அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம் என்பது பல்வேறு சேவைகள் வழங்குவதை மேம்படுத்துவதுடன், திட்டங்கள், பணிகளை விரைவுபடுத்துவதற்கான திட்டமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.