ADDED : ஜூன் 21, 2025 03:43 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மகள் கடத்தப்பட்டதாக தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கோவிலுார் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது 17 வயது மகள் பிளஸ் 2 முடித்துள்ளார். இவரை கடந்த இரு தினங்களாக காணவில்லை.
இதுகுறித்து அய்யப்பன், தனது மகளை ராஜி, விஷ்ணு ஆகியோர் கடத்தி சென்றதாக அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.