/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பாசன கால்வாய்களை செப்பனிட விவசாயிகள் கோரிக்கை! விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?பாசன கால்வாய்களை செப்பனிட விவசாயிகள் கோரிக்கை! விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பாசன கால்வாய்களை செப்பனிட விவசாயிகள் கோரிக்கை! விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பாசன கால்வாய்களை செப்பனிட விவசாயிகள் கோரிக்கை! விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
பாசன கால்வாய்களை செப்பனிட விவசாயிகள் கோரிக்கை! விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
ADDED : ஜூன் 10, 2024 01:05 AM
தியாகதுருகம் : தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைவதற்குள் கோமுகி மற்றும் மணிமுக்தா அணைகளின் பாசன கால்வாய்களை செப்பனிட்டு துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கோமுகி மற்றும் மணிமுக்தா ஆகிய இரு அணைகள் உள்ளன. சூளாங்குறிச்சி அருகே மணிமுக்தா அணை உள்ளது. இதன் கொள்ளளவு 36 அடியாகும் இதனால் 5,500 ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசன வசதி பெறுகிறது.
கச்சிராயபாளையம் அருகே கோமுகி அணை அமைந்துள்ளது. இதன் முழு கொள்ளளவு 46 அடி ஆகும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
அதுமட்டுமின்றி பாசன கால்வாய் வழித்தடத்தில் உள்ள ஏரிகள் நிரம்புவதன் மூலம் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. இதனால் கிணற்று நீர் பாசனத்தால் மறைமுகமாக இரு அணைகள் மூலம் 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் விவசாயம் செழிக்க காரணமாக உள்ளது.
கோமுகி அணையின் 3 ஷெட்டர்கள் 12 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ளது. மணிமுத்தா அணையில் 3 ஷெட்டர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் புதிதாக அமைக்கப்பட்டது.
ஆனால் இரு அணைகளும் நிர்மாணிக்கப்பட்ட போது கட்டப்பட்ட பிரதான பாசன கால்வாய் இதுவரை செப்பனிடும் பணி முழுமையாக நடக்கவில்லை. இதன் காரணமாக பல இடங்களில் கால்வாயில் தடுப்புச் சுவர்கள் சேதம் அடைந்து தண்ணீர் விரயமாகிறது. பராமரிப்பின்றி முட்செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், கடைமடைக்கு நீர் செல்லாததால் அப்பகுதி விளை நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒவ்வொரு ஆண்டும் இதனை தற்காலிகமாக சீரமைக்கிறார்களே தவிர கால்வாய் முழுதும் தரமான கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் காரணமாக அந்தந்த பகுதி விவசாயிகளே பாசன கால்வாய்களை செப்பனிட்டு கரைகளை சீர்படுத்தி புதர்களை அகற்றுகின்றனர்.
அதேபோல் அணைகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் வரத்து வாய்க்கால்களும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் மூடிக் கிடக்கிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து, அணை நிரம்பியதும் திறந்து விடப்படும் நீர் ஆயக்கட்டு நிலங்களுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் பாசன கால்வாய்களை செப்பனிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.