Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க., இரண்டாக பிரிக்க எதிர்பார்ப்பு

ADDED : செப் 23, 2025 07:44 AM


Google News
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடந்த 2019ம் ஆண்டு உதயமானது. மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை என 4 சட்டசபை தொகுதிகள் உள்ளது. புதிய மாவட்டம் உதயமான பின்பு தி.மு.க., - பா.ம.க., - வி.சி., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், மாவட்ட செயலாளர் பதவிகள் பிரித்து கட்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

தி.மு.க.விலும் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என தெற்கு, வடக்கு என இரு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். புதியதாக கட்சி துவங்கியுள்ள த.வெ.க.,விலும் இரு மாவட்ட செயலாளர்கள் நியமித்து செயல்படுகின்றனர்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் அ.தி.மு.க., கட்சி மாவட்ட பொறுப்பு 2 ஆக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை மட்டும் 2 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் பிரிக்கப்படவில்லை. இதற்கு விழுப்புரம் மாவட்டத்தை மட்டும் 2 ஆக பிரிக்க கூடாது என முன்னாள் அமைச்சர் ஒருவர் முரண்டு பிடித்து வருவதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் ஆரம்ப கால நெருங்கிய நண்பர் என்பதாலும், கட்சி பணிக்கான செலவுகள் செய்வதில் குமரகுருவை விட்டால், வேறு ஆள் கிடையாது என்பதால், மாவட்டத்தை பிரிப்பதற்கு முன்வரவில்லை என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

மற்ற கட்சிகளில் மாவட்ட செயலாளர்கள் தங்களது வெற்றிக்கும், தனது கட்டுபாட்டில் உள்ள மற்றொரு தொகுதியின் வெற்றிக்கும் குறி வைத்து வியூகங்களை வகுத்து வருகின்றனார். ஆனால் அ.தி.மு.க.,வில் 4 சட்டசபை தொகுதிகளையும் ஒருவரே கவனம் செலுத்த வேண்டிருப்பதால் லோக்சபா, சட்டசபை தேர்தல் நேரங்களில் பெரும் சவாலாக இருப்பதாக ஆதங்கப்படுகின்றனர். எனவே, பிரதான கட்சியான அ.தி.மு.க.,வில் மாவட்ட செயலாளர் பதவியை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது கட்சியினரின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us