ADDED : ஜன 12, 2024 11:16 PM

சங்கராபுரம், -சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழாவிற்கு, தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சத்யநாராயணன் முன்னிலை வகித்தார். சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை தாசில்தார் ராமசாமி, தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ், வருவாய் ஆய்வாளர் கலைவாணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
திருக்கோவிலுார்
திருக்கோவிலுார் அடுத்த பழங்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவிற்கு தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் பிரசன்னா, சியாமளா, திருமலை, ஜெயந்தி, சிவக்குமார் உள்ளிட்டோர் மாணவர்களுடன் புதுப்பானையில் பொங்கல் வைத்து, பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடத்தி பொங்கல் விழாவைக் கொண்டாடினர். பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் சரஸ்வதி நன்றி கூறினார்.