Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் பயிற்சி

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் பயிற்சி

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் பயிற்சி

தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் பயிற்சி

ADDED : ஜூன் 04, 2025 01:32 AM


Google News
கள்ளக்குறிச்சி :தொழில் முனைவோராக விருப்பமுள்ளவர்கள் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பில் சேர மாவட்ட தொழில்முனைவோர் திட்ட மேலாளர் அறிவொளி அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு :

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் மற்றும் அகமதாபாத் இணைந்து, சென்னை கிண்டியில் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பை நடத்துகிறது.

நடப்பு மாதம் துவங்க உள்ள பயிற்சியில், தொழில் முனைவோராக ஆர்வமுள்ள, 21 முதல் 40 வயதுக்குட்ட பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ., தொழிற்கல்வி பயிற்சி முடித்தவர்கள் சேரலாம். இதற்கு ஆண்டு கட்டணமாக ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டும்.

அனுபவமிக்க பயிற்றுநர்களை கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது. புதுப்பித்த பாடத்திட்டங்கள், நவீன வசதியுடன் கூடிய நுாலகங்கள், குளிரூட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள் உள்ளன.

இதில் சேருபவர்கள் மாநில அரசு நிறுவனங்களுக்கு சென்று, தொழில் முனைவோருக்கு தேவையான அத்தியாவசிய வணிகத்தையும், திட்ட அறிக்கை தயாரிக்கும் திறனையும் வளர்த்து கொள்ளலாம்.

கல்வி கட்டணத்திற்கு வங்கி கடன் வசதி செய்து தரப்படும். மேலும், விபரங்களை www.editn.in என்ற இணையதளத்திலும், 81108 29557 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் கேட்டறியலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us