/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீட்டிலிருந்து மாயமான முதியவர் சாவு வீட்டிலிருந்து மாயமான முதியவர் சாவு
வீட்டிலிருந்து மாயமான முதியவர் சாவு
வீட்டிலிருந்து மாயமான முதியவர் சாவு
வீட்டிலிருந்து மாயமான முதியவர் சாவு
ADDED : மார் 23, 2025 10:51 PM
கச்சிராயபாளையம் : வீட்டில் இருந்து வெளியில் சென்ற முதியவர், கிணற்றில் இறந்து கிடந்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரியை சேர்ந்தவர் கந்தன், 70; ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்ட இவர், அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே சென்று இரவு நேரங்களில் திரும்பி வருவார். கடந்த 22ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை.
இந்நிலையில், நேற்று காலை பால்ராம்பட்டை சேர்ந்த நல்லதம்பி, என்பவரின் விவசாய கிணற்றில் அவரது உடல் மிதந்தது தெரியவந்தது.
கச்சிராயபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.