/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூன் 27, 2025 12:23 AM

கள்ளக்குறிச்சி:உலக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். இதில் கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், பங்கேற்று போதை பொருட்கள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
முன்னதாக போதை பொருள் ஒழிப்பு தொடர்பாக கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த பேரணியில் மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று போதை பொருளின் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் ராமச்சந்திரன், உடற்கல்வி இயக்குனர் சிவாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.