Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சொட்டு நீர் பாசனம்: விவசாயிகளுக்கு அழைப்பு

சொட்டு நீர் பாசனம்: விவசாயிகளுக்கு அழைப்பு

சொட்டு நீர் பாசனம்: விவசாயிகளுக்கு அழைப்பு

சொட்டு நீர் பாசனம்: விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : ஜன 03, 2024 12:01 AM


Google News
கள்ளக்குறிச்சி : வறட்சியை சமாளிக்க சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயம் செய்ய கலெக்டர் அறிவுறுத் தியுள்ளார்.

கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:

தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் ஒருதுளி-அதிக பயிர் என்ற திட்டத் தின் கீழ், சிறு, குறு விவசா யிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்கப்படுகிறது.

இதற்கு இதுவரை ரூ.26.57 கோடி நிதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.19.47 கோடி செலவில் 1,781 எக்டேரில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் களைகளும் கட்டுப்படுத்தப்படுகிறது. உரங்கள் தண்ணீர் மூலம் அளிக்கப்படுவதால், உரங்கள் வீணாவதில்லை, செல வும் குறைகிறது.

பூச்சி நோய் பாதிப்பு கட்டுப் படுத்தப்பட்டு, நீர்ப்பாசனத்திற்கு ஆட்கள் குறைகிறது. அதிக மகசூல் கிடைக்கிறது. எனவே அரசு அளிக்கும் மானிய உதவியுடன் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும். இதற்கு சிட்டா, நிலவரை படம், அடங்கல், ஆதார், ரேஷன் மற்றும் வங்கி புத்தக நகல், சிறு விவசாயி சான்று, மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களுடன் வேளாண்மை அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us