/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2025 05:33 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தி.மு.க., சார்பில் கவர்னர் ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க., நகர செயலாளர் சுப்ராயலு தலைமை தாங்கினார். எம்.பி., மலையரசன், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தி.மு.க., ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பெருநர்கிள்ளி பங்கேற்று, மத்திய பா.ஜ., அரசின் ஏஜென்ட்டாக செயல்படும் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து, கவர்னர் ரவிக்கு எதிரான கோஷங்களை தி.மு.க., வினர் எழுப்பினர்.
அப்போது, தி.மு.க., மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம், அண்ணாதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முருகன், எத்திராஜ், உளுந்துார்பேட்டை நகர சேர்மன் திருநாவுக்கரசு, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், சத்தியமூர்த்தி, அன்புமணிமாறன், பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அசோக்குமார், வைத்தியநாதன், ராஜவேல், வசந்தவேல், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அய்யனார், முருகன், நகர செயலாளர்கள் ஜெய்கணேஷ், டேனியல்ராஜ், ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், தாமோதரன், வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணை சேர்மன் சங்கர், இளைஞரணி மாவட்ட நிர்வாகிகள் அருண்ராஜ், உதயா உட்பட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.