/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருநாவலுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு திருநாவலுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருநாவலுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருநாவலுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
திருநாவலுாரில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : செப் 14, 2025 01:54 AM

கள்ளக்குறிச்சி, : திருநாவலுாரில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் தனியார் கல்லுாரியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில் நடந்த முகாமினை தொழில்நுட்பக் கல்வி ஆணையரான மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்பு அவர் கூறியதாவது; பொது மருத்துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு, குழந்தைகள், நுரையீரல் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்தம், இ.சி.ஜி உள்ளிட்ட பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு, எக்கோ கார்டியோகிராம், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்பட்டுகிறத. அதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறினார். மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., உடனிருந்தார்.