/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு கள்ளக்குறிச்சி வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கள்ளக்குறிச்சி வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கள்ளக்குறிச்சி வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கள்ளக்குறிச்சி வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : செப் 15, 2025 02:43 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் இன்னசென்ட் திவ்யா நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.
உளுந்துார்பேட்டை நகராட்சியில் ரூ.98 லட்சம் மதிப்பிலான புதிய தார் சாலை, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.100 கோடி மதிப்பிலான திருக்கோவிலுார்-ஆசனுார் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி ஆய்வு செய்யப்பட்டது.
பணியின் திட்ட மதிப்பீடு, பணி துவங்கிய காலம், முடிவடையும் காலம், தரம், கட்டுமானப் பொருட்கள் விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தனர்.
வளர்ச்சித் திட்டப் பணிகளின் தரத்தினை உறுதி செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பொதுமக்களின் தேவை அறிந்து வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்களுக்கு, கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார். ஆய்வில் திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்த்குமார்சிங் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.