Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் மக்கள் பணியில் தினமலரின் பங்களிப்பு

திருக்கோவிலுார் மக்கள் பணியில் தினமலரின் பங்களிப்பு

திருக்கோவிலுார் மக்கள் பணியில் தினமலரின் பங்களிப்பு

திருக்கோவிலுார் மக்கள் பணியில் தினமலரின் பங்களிப்பு

ADDED : செப் 05, 2025 10:46 PM


Google News
திருக்கோவிலுார்; மக்கள் பணியில் செய்தி ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. உண்மை தகவல்களை மக்களுக்கு வழங்குவது மட்டுமின்றி, பொதுமக்களின் தேவைகள், எண்ணங்களையும் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக இருந்து, அவை நிறைவேறும் வரை மக்களுடன் பயணித்து அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் அதற்கு உண்டு. இதனை உணர்ந்து தினமலர் என்றென்றும் மக்களின் வழியில், மக்களுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கிறது.

திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களின் தேவைகளை அறிந்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டதன் காரணமாக, ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருக்கோவிலுார் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது என்ற நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து செய்தி வெளியிட்டதன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு அறிவித்தது.

திருக்கோவிலுார் தெப்பக்குளம் குறித்து செய்தி கட்டுரை வெளியானது. அதன் எதிரொலியாக கடந்த 2022ம் ஆண்டு பட்ஜெட் மானிய கோரிக்கையில், ரூ.3 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடக்கிறது.

திருக்கோவிலுார் - அரகண்டநல்லுார் இடையே தென்பெண்ணையாற்றில் பழுதடைந்த தரைப்பாலத்திற்கு மாற்றாக உயர் மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்ற விரிவான விளக்கக் கட்டுரை வெளியிடப்பட்டதால், உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு ரூ. 112.07 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு டெண்டர் பணிகள் துவங்கி உள்ளது. திருக்கோவிலுாரில் வாடகை கட்டடத்தில் இயங்கிய வேளாண்மை அலுவலகங்களுக்கு, கீரனுார் புறவழிச் சாலையில் ரூ.3 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கம் மையம் கட்டி திறக்கப்பட்டது.

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் கிழக்கு ராஜகோபுரம் புனரமைப்பு பணி குறித்து செய்தி வெளியிட்டதன் காரணமாக, ராஜகோபுரம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை தரம் உயர்த்த வேண்டும் என்ற செய்தியை தொடர்ந்து, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு ரூ. 54 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. திருக்கோவிலுார் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை சுட்டிக்காட்டி அவ்வப்பொழுது செய்தி வெளியானதால், ரூ.22.20 கோடி மதிப்பீட்டில் அரசாணை வெளியிடப்பட்டு, புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான டெண்டர் நிறைவடைந்து பணிகள் துவங்க உள்ளது. இதுபோன்று திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார கிராம வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரம் மேம்பட ஏராளமான செய்திகளை வெளியிட்டு தினமலர் துணை நிற்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us