ADDED : ஜன 05, 2024 06:21 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் ஆயிரத்து 200 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.
கரியலுார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று கல்வராயன்மலையில் உள்ள சின்னத்திருப்பதி கிராமத்தில் சாராய ரெய்டு சென்றனர். அப்போது வனப்பகுதியில் உள்ள மகாகனி ஓடையில் 200 லிட்டர் கொள்ளவு கொண்ட 6 பேரல்களில் ஆயிரத்து 200 லிட்டர் சாராய ஊறல் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர்.