/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு வைப்பு நிதி பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு வைப்பு நிதி
பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு வைப்பு நிதி
பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு வைப்பு நிதி
பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு வைப்பு நிதி
ADDED : செப் 25, 2025 11:46 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெற்றோர்களை இழந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் நிரந்தர வைப்பு நிதி காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர் விபத்தின் காரணமாக இறப்பு அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டவர்களுக்கு நிரந்தர வைப்புத் தொகைக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மின்விசை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மூலம் ஒரு மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாயும், 18 மாணவ, மாணவிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 14 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதிக்கான காசோலைகளை கலெக்டர் பிரசாந்த் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகளிடம் வழங்கினார்.