/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 05, 2024 10:31 PM

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு கண்டன உரையாற்றினார். பல்வேறு சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் ஜார்ஜ்வாஷிங்டன், நாராயணசாமி, குமார், ஆனந்தகிருஷ்ணன், ஆரோக்கியசாமி, ஆரோக்கியதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கிராம ஊராட்சி செயலர்களுக்கு விடுபட்டுள்ள அனைத்து உரிமைகளையும் உடனடியாக வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட கணினி உதவியாளர்களை பணிவரன் முறைப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மாவட்ட பொருளார் வீரபுத்திரன் நன்றி கூறினார்.