/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 11:13 PM

சங்கராபுரம், -சங்கராபுரத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார கல்வி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் சம்சுதீன் தலைமை தாங்கினார்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் வடிவேல், தேவேந்திரன், சங்கீதா முன்னிலை வகித்தனர். ஆரம்ப பள்ளி ஆசிரியர் வட்ட செயலாளர் கபிரியல் வரவேற்றார்.
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயலாளர் தங்கராஜ், மாநிலத் தலைவர் லட்சுமிபதி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.
தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்ட செயலாளர் பாலு வாழ்த்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தொடக்க கல்வித் துறையில் பணியாற்றக்கூடிய 90 சதவீதம் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக் கூடிய அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், டிட்டோ ஜாக் உயர்மட்டக் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்பு கொண்ட 12 கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆரம்பர பள்ளி ஆசிரியர் வட்டார தலைவர் ராஜா நன்றி கூறினார்.