/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வீரட்டானேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டைவீரட்டானேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
வீரட்டானேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
வீரட்டானேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
வீரட்டானேஸ்வரர் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
ADDED : ஜன 25, 2024 04:39 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் , கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 2.80 கோடி மதிப்பீட்டில் திருப்பணி நடந்து வருகிறது. இதில் விடுபட்ட ஒரு சில சன்னதிகள் உள்ளிட்டவை உபயதாரர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பழமை வாய்ந்த கொடிமரம் பழுதடைந்ததால், அது அகற்றப்பட்டு, புதிய கொடிமரம் அமைக்க கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. நகராட்சி சேர்மன் முருகன் உபயத்தில், ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் 33 அடி உயர புதிய கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதற்காக காலை 6:30 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, எந்திர ஸ்தாபனம், நவரத்தின பஞ்சலோக ங்கள் போடப்பட்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்து நிலை நிறுத்தப்பட்டு தீபாராதனை நடந்தது.
தொழிலதிபர்கள் முரளி, முருகன், சேர்மன் முருகன், நகராட்சி கவுன்சிலர்கள் கோவிந்து, சம்பத், புவனேஸ்வரிராஜா, ரவி, சக்தி, அர்ச்சனாயுகேஷ், பா.ஜ., மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் ராதாகிருஷ்ணன், தொ.மு.ச., சரவணன், நாராயணன், அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், செயல் அலுவலர் அருள், ஆய்வாளர் பாக்கியலட்சுமி, எழுத்தர் மிரேஷ் குமார் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.