/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காவலர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டி காவலர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டி
காவலர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டி
காவலர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டி
காவலர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு போட்டி
ADDED : செப் 08, 2025 03:15 AM

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் காவலர் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கடந்த 1859ம் ஆண்டு, செப்., 6ம் தேதி மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை சிறப்பிக்கும் வகையில் காவலர் தினம் கொண் டாட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் போலீ சாருக்கு கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டு, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தொடர்ந்து ஏ.கே.டி., பள்ளியில், சமுதாயத்தில் காவல் துறையின் பங்கு என்ற தலைப்பில் ஓவியம், பேச்சு, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, ஏ.கே.டி., மற்றும் மவுண்ட்பார்க் பள்ளி மாணவ, மாணவியர் போட்டிகளில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தங்கவேல் பரிசு வழங்கி பாராட்டினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்இன்பெக்டர்கள் விஜயராகவன், ஞானசேகரன், ராஜகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.