/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர்... உத்தரவு; கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க அறிவுறுத்தல்வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர்... உத்தரவு; கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க அறிவுறுத்தல்
வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர்... உத்தரவு; கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க அறிவுறுத்தல்
வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர்... உத்தரவு; கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க அறிவுறுத்தல்
வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர்... உத்தரவு; கள்ளச்சாராயம் குறித்து தகவல் அளிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2024 05:41 AM

கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் காய்ச்சுவதைத் தடுக்கும் பொருட்டு கிராமங்களில் வருவாய்த் துறை அலுவலர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு தகவல் அளிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்கிக் குடித்த 221 பேர் பாதிப்புக்குள்ளாகி, 58 பேர் இறந்தனர். இச்சம்பவத்தில் காவல் துறையினர் மட்டுமின்றி, வருவாய்த் துறை அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாமல் போனதும் காரணமாக அமைந்துள்ளது.
வருவாய் துறை அதிகாரிகள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக கண்காணித்து காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தடுத்திருப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தில் இனி கள்ளச்சாராயம் பாதிப்பு சம்பவம் வருங்காலங்களில் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மற்றும் போதைப் பொருள் விற்பர்களைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள கிராமங்களில் உள்ள வி.ஏ.ஓ., மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், வருவாய்த் துறையினர், கலால் அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இது தொடர்பாக காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனையடுத்து மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், திருக்கோவிலுார் அடுத்த மேமளூர் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பு, அகஸ்தியார் மூலை கிராம புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நரியந்தல் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பது.
மேலும் உளுந்துார்பேட்டை அடுத்த நத்தாமூர் மாரியம்மன் கோவில் நிலம் குத்திகை, அஜீஸ் நகர் சாரதா ஆசிரமம் அருகில் மின்விளக்கு மற்றும் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த சித்தாத்துார் கிராமத்தில் குடிநீர் வசதி, நீலமங்கலம் பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் வாய்க்கால் அமைப்பது, சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் கிராமத்தில் காத்தவராயன் கோவில் திருவிழா நடத்துவது மற்றும் பூசப்பாடி கிராமத்தில் பஞ்சமி நிலம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.