Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடம் வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு

ADDED : ஜூலை 05, 2025 03:36 AM


Google News
கள்ளக்குறிச்சி: அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் வரன்முறைபடுத்தும் வகையில் விண்ணப்பம் செய்ய ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

திட்டமில்லா பகுதிகளில் கடந்த 2011ம் ஆண்டு ஜன., 1ம் தேதிக்கு முன்னர் கட்டுபட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்கள் வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் இணைதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

அதில் கடந்த 1ம் தேதி முதல் வரும் 2026ம் ஆண்டு ஜூன் 30 வரை ஓராண்டு காலம் நீட்டிப்பு செய்து, வழிகாட்டுதல்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்கள் மலையிடப்பகுதியில் அமையும் பட்சத்தில் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us