/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ துாய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி திட்ட இயக்குனர் துவக்கி வைப்பு துாய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி திட்ட இயக்குனர் துவக்கி வைப்பு
துாய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி திட்ட இயக்குனர் துவக்கி வைப்பு
துாய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி திட்ட இயக்குனர் துவக்கி வைப்பு
துாய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி திட்ட இயக்குனர் துவக்கி வைப்பு
ADDED : செப் 17, 2025 11:38 PM

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் துாய்மையே சேவை என்ற விழிப்புணர்வு பேரணியை திட்ட இயக்குனர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வாணாபுரத்தில் நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு மாவட்ட திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். உதவி திட்ட இயக்குனர் தேவராஜன், பி.டி.ஓ.,க்கள் துரைமுருகன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் தீபா அய்யனார் வரவேற்றார்.
துாய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, செப்., 17 முதல் அக்., 2 வரை துாய்மையே சேவை என்ற விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது. குப்பையில்லா இந்தியா என்ற நோக்கத்தை மையமாக கொண்டு, துாய்மை மற்றும் சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்படுகிறது. திட்ட இயக்குநர் ரமேஷ்குமார் கொடியசைத்து, பேரணியை துவக்கி வைத்தார்.
துாய்மை பாரத திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வில்சன், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஏழுமலை, வீரன், ஊராட்சி செயலாளர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.