/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ துாய்மை இயக்கம் திட்ட உறுதிமொழியேற்பு துாய்மை இயக்கம் திட்ட உறுதிமொழியேற்பு
துாய்மை இயக்கம் திட்ட உறுதிமொழியேற்பு
துாய்மை இயக்கம் திட்ட உறுதிமொழியேற்பு
துாய்மை இயக்கம் திட்ட உறுதிமொழியேற்பு
ADDED : செப் 21, 2025 04:58 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை இயக்கும் 2.0 திட்டத்தின் கீழ் அலுவலகம் மற்றும் சுற்றுபுறம் துாய்மை உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜீவா தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் முன்னிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியேற்றனர்.
இதில் சுத்தமே சுகாதாரம் என்பதை கடைபிடிப்பேன். உணவருந்தும் இடம், கழிப்பறை ஆகியவற்றை முறையாக பயன்படுத்துவதோடு, பராமரிக்க ஒத்துழைப்பு அளிப்பேன். அலுவலகத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்வேன். துாய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுத்தி கொள்வேன் என உறுதிமொழியேற்றனர்.
மேலும் இத்திட்டத்தின் கீழ் கலெக்டர் அலுவலகம் உட்பட அனைத்து துறை அலுவங்களிலும் குப்பைகள் அகற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி, நகர மன்ற தலைவர் சுப்ராயலு, ஒன்றிய சேர்மன்கள் அலமேலு ஆறுமுகம், சத்தியமூர்த்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.