/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/சின்னசேலம் ஏரி கால்வாய்களை துார் வார நடவடிக்கை தேவைசின்னசேலம் ஏரி கால்வாய்களை துார் வார நடவடிக்கை தேவை
சின்னசேலம் ஏரி கால்வாய்களை துார் வார நடவடிக்கை தேவை
சின்னசேலம் ஏரி கால்வாய்களை துார் வார நடவடிக்கை தேவை
சின்னசேலம் ஏரி கால்வாய்களை துார் வார நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 07, 2024 06:24 AM
கள்ளக்குறிச்சி: துார்ந்து கிடக்கும் சின்னசேலம் ஏரி கால்வாய்களை துார் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.சின்னசேலத்தில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.
கோமுகி அணை மற்றும் மயூரா நதியிலிருந்து ஏரிக்கு நீர் வரத்து இருந்து வருகிறுது. 360 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் மூலமாக பெத்தானுார், வினைதீர்த்தாபுரம், எரவார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.ஆனால், சின்னசேலம் ஏரியின் வடிகால் வாய்க்கால் மற்றும் எலவடி ஏரியிலிருந்து வரும் வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் முட்புதர்கள் மண்டி கிடக்கிறது. இதனால், ஏரிக்கு நீர் வருவதற்கு வழியின்றி பாதிப்படைகிறது. அதேப்போல் நீர் வெளியேறும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அருகிலுள்ள வயல்களில் தேங்கி, விவசாயத்திற்கு பயன்படாமல் போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், சின்னசேலம் ஏரியின் நீர்வரத்து மற்றும் வடிகால் வாய்க்கால்களை துார் வார பொதுப்பணி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.