Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ஊராட்சி செயலாளர் தாக்கிய சின்னசேலம் பி.டி.ஓ., அட்மிட்

ஊராட்சி செயலாளர் தாக்கிய சின்னசேலம் பி.டி.ஓ., அட்மிட்

ஊராட்சி செயலாளர் தாக்கிய சின்னசேலம் பி.டி.ஓ., அட்மிட்

ஊராட்சி செயலாளர் தாக்கிய சின்னசேலம் பி.டி.ஓ., அட்மிட்

ADDED : ஜன 31, 2024 07:29 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம ஊராட்சி பி.டி.ஓ., வாக பணிபுரிபவர் ஜெகநாதன். இவர், வரும் லோக்சபா தேர்தலை முன்னிட்டு ஒன்றியத்தில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்வதற்கான பட்டியல் தயார் செய்துள்ளார்.

அதில், தொட்டியம் ஊராட்சி செயலர் துரையை, வி.பி.அகரம் ஊராட்சிக்கு மாற்றியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த துரை, நேற்று இரவு 8 மணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த பி.டி.ஓ., ஜெகநாதனை திட்டி தாக்கினார்.

திடுக்கிட்ட சக ஊழியர்கள், ஜெகநாதனை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தகவலறிந்த மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெகநாதனை சந்தித்து ஆறுதல் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us