/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாநில அளவிலான அணி உருவாக்கம் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாநில அளவிலான அணி உருவாக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாநில அளவிலான அணி உருவாக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாநில அளவிலான அணி உருவாக்கம்
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி மாநில அளவிலான அணி உருவாக்கம்
ADDED : செப் 11, 2025 03:16 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த அணியில் உள்ள வீரர்களை கொண்டு புதிய அணி உருவாக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆக., 26ம் தேதி மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி துவங்கியது. இதில், பள்ளி மாணவர்களுக்கு பேட்மிட்டன், தடகளம், கிரிக்கெட், சிலம்பம், வாலி பால் என 15 வகை போட்டிகளும், கல்லுாரி மாணவர்களுக்கு செஸ், கேரம், டேபிள் டென்னிஸ், கபடி உள்ளிட்ட 15 வகை போட்டிகள் நடத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளில் 8 போட்டிகளும், பொதுமக்களுக்கு 8 வகை போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு 6 வகை போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகள் நேற்று முடிந்தது. அனைத்து போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்த அணிக்கு ரூ.3 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டு சான்று, கேடயமும், அதேபோல், இரண்டாமிடம் பிடித்த அணிக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ரூ. ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இதில், முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு புதிய அணி உருவாக்கப்படுகிறது. அந்த அணியில் உள்ள வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்பர்.