/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தியாகதுருகம் மவுண்ட்பார்க் மழலையர் பள்ளியில் செஸ் போட்டி தியாகதுருகம் மவுண்ட்பார்க் மழலையர் பள்ளியில் செஸ் போட்டி
தியாகதுருகம் மவுண்ட்பார்க் மழலையர் பள்ளியில் செஸ் போட்டி
தியாகதுருகம் மவுண்ட்பார்க் மழலையர் பள்ளியில் செஸ் போட்டி
தியாகதுருகம் மவுண்ட்பார்க் மழலையர் பள்ளியில் செஸ் போட்டி
ADDED : ஜூலை 04, 2025 02:39 AM

தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட்பார்க் மழலையர் பள்ளியில் செஸ் போட்டி நடந்தது.
தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 11, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளி அளவில் செஸ் போட்டிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி தியாகதுருகம் மவுண்ட்பார்க் மழலையர் பள்ளியில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளை மவுண்ட்பார்க் கல்விகுழுமங்களின் தாளாளர் மணிமாறன் தலைமை தாங்கி துவக்கினார். பள்ளியில் பயிலும் 11 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் மணிமாறன் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
தலைமை ஆசிரியை ஜாஸ்மின் டயானா, பயிற்சியாளர் நாகராஜன் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் அடுத்த கட்ட செஸ் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர்.