/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அய்யனார் கோவில் பூமாலையை எரித்த 73 பேர் மீது வழக்கு அய்யனார் கோவில் பூமாலையை எரித்த 73 பேர் மீது வழக்கு
அய்யனார் கோவில் பூமாலையை எரித்த 73 பேர் மீது வழக்கு
அய்யனார் கோவில் பூமாலையை எரித்த 73 பேர் மீது வழக்கு
அய்யனார் கோவில் பூமாலையை எரித்த 73 பேர் மீது வழக்கு
ADDED : செப் 14, 2025 01:53 AM
கள்ளக்குறிச்சி : அணைகரைக்கோட்டாலத்தில் அய்யனார் கோவிலில் சுவாமி கழுத்தில் அணிவித்த பூமாலையை எரித்ததாக 73 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா அணைகரை பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் ஒரு தரப்பினர் சுவாமி வழிபாடு செய்வது வழக்கம். இக்கோவிலில் மற்றொரு தரப்பினர் சுவாமி வழிபாடு செய்ய ஏற்பாடுகளை மேற்கொண்டதால், இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டது.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், பொங்கல் வைக்காமல் சுவாமி வழிபாடு மட்டும் செய்யலாம் என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, கடந்த 8ம் தேதி மற்றொரு தரப்பினர் சுவாமி வழிபாடு செய்ய மேளதாளத்துடன் கோவிலுக்கு சென்றனர். அப்போது, மேளதாளம் அடித்து செல்ல அனுமதி கிடையாது என்று போலீசார் தெரிவித்ததால், கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, டி.எஸ்.பி., தங்கவேல் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், மேளதாளம் அடிக்காமல் செல்வதாக கூறி, மறியலில் கைவிட்டு ஊர்வலமாக சென்று சுவாமி வழிபாடு செய்தனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 36 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், வழிபாடு முடித்து சென்ற பிறகு, எதிர் தரப்பினர் சுவாமி கழுத்தில் இருந்த எடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும், கோவில் முழுவதும் பினாயில் ஊற்றி கழுவியதாகவும் மற்றொரு தரப்பை சேரந்த பார்த்தீபன் என்பவர் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சரவணன், விஜயகுமார், அரவிந்தன், சுதாகர் உட்பட 73 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.