Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணம் 5 பேர் மீது வழக்கு

ADDED : ஜூன் 30, 2025 03:20 AM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சிறுமி திருமணம் விவகாரத்தில், 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் கோவிந்தன்,20; இவர் கடந்த ஏப்ரல் மாதம், 17 வயது சிறுமியை திருமணம் செய்தார்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி மகளிர் ஊர்நல அலுவலர் பஞ்சவர்ணம், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சிறுமியை திருமணம் செய்த கோவிந்தன்,20; அவரது தந்தை பெருமாள், தாய் அய்யம்மாள் மற்றும் சிறுமியின் தந்தை சின்னதுரை, தாய் லட்சுமி ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ

வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us